பருப்பு, திணை வைத்து சுவையான சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 இஞ்ச் துண்டு
திணை – அரை கப்
பாசிப் பருப்பு – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கேரட் – 1
பீன்ஸ் – 10
உருளைக் கிழங்கு – 1 சிறியது
தக்காளி – 1 சிறியது
முருங்கை இலை – கைப்பிடியளவு
தாளிக்க :
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
மிளகு – அரை ஸ்பூன்
வத்தல் மிளகாய் – 1
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* அனைத்து காய்கறிகளையும் சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* திணை மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி 1½ கப் சூடான நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வத்தல் மிளகாய், பெருங்காயம், நல்ல மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் அதில் அனைத்து காய்கறிகள், கீரை, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு நீரில் ஊற வைத்த திணை மற்றும் பருப்பை ஊற வைத்த நீருடன் சேர்க்கவும். உப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.
* அதன் பின் குக்கரை மூடி வைத்து 2 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்பு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து பின் தீயை அணைத்து விடவும்.
* குக்கரிலுள்ள பிரஷர் முழுவதும் வெளியேறியதும் அதனை திறந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலக்கவும்
* சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி ரெடி.