201612300852551734 how to make pani varagu kanji SECVPF
​பொதுவானவை

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றும் அனைவருக்கும் உகந்த சத்தான சுவையான பனிவரகு கஞ்சியை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி
தேவையான பொருட்கள் :

பனிவரகு – ஒரு கப்,
கேரட் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க :

கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
பூண்டுப் பல் – 2,
பச்சை மிளகாய் – ஒன்று (கீறியது),
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது (நசுக்கியது),

செய்முறை :

* கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகை ஒன்றிரண்டாக உடைத்தது கொள்ளவும்.

* பனிவரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் சேர்த்துக் சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, கேரட் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

* கொதி வந்ததும் பனிவரகு அரிசியை சேர்த்து, 3 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, மிளகுத்தூள் தூவி, தேங்காய்ப் பல் சேர்த்து அலங்கரித்து சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

* சத்தான சுவையான பனிவரகு கஞ்சி ரெடி.201612300852551734 how to make pani varagu kanji SECVPF

Related posts

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

nathan

பைனாப்பிள் ரசம்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

மட்டன் கீமா நோன்பு கஞ்சி : செய்முறைகளுடன்…!

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

nathan

குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்க பள்ளிகள் என்ன செய்யலாம்

nathan

சாம்பார் பொடி செய்வது எப்படி

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan