தேவையானவை:
கோவைக்காய் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
வறுத்துத் பொடிக்க:
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
தனியா – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – சிறிதளவு
மிளகாய் வற்றல்- 2
தோல் நீக்கிய நிலக்கடலை – 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 1
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை:
• கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் வற்றல், தோல் நீக்கிய நிலக்கடலையை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
• கோவைக்காயை நன்றாக கழுவி நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் தாளிசப் பொருட்களைத் தாளித்து கோவைக்காயை போட்டு நன்றாக கிளறயும்.
• 5 நிமிடம் கழித்து சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும்.
• காய் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
• சத்தான கோவைக்காய் பொரியல் ரெடி.