என்னென்ன தேவை?
கோன் செய்ய…
தினை மாவு – 1/2 கப்,
மைதா- 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
பால் – மாவு பிசைய தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.
அலங்கரிக்க…
ஜெம்ஸ் மிட்டாய்.
கோன் பில்லிங்கிற்கு…
விருப்பமான நட்ஸ் துருவல் – 1/4 கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த ஹோம் மேட் சாக்லெட் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து பால் விட்டு பிசைந்து சிறு வட்டமாக இட்டு மாவில் கோன் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதன் உள்ளே ஃபில்லிங் பொருட்களை ஒன்றாக சேர்த்து கலக்கி போடவும். நடுவே ஜெம்ஸ் மிட்டாய் வைத்து பரிமாறவும். இதில் தினை மாவு, நட்ஸ், ஹோம்மேட் சாக்ெலட் இருப்பதால் ஆரோக்கியமான டிஷ் இது!