201703151301096270 wheat brown aval chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கோதுமை, சிவப்பு அவலை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கோதுமை, சிவப்பு அவல் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் – 1 கப்,
கோதுமை மாவு – முக்கால் கப்,
சற்று புளித்த தயிர் – அரை கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா (விரும்பினால்) – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு.

செய்முறை :

* அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

* 1 மணிநேரம் கழித்த பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சாப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.

* சுவையான சத்தான கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி ரெடி.

* வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும். 201703151301096270 wheat brown aval chapati SECVPF

Related posts

இளநீர் ஆப்பம்

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

அவல் உசிலி

nathan

இட்லி

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan