தேவையான பொருட்கள்:
மோர் – 1 கப்
வெள்ளரிக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் – 5
மிளகு தூள் – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
செய்முறை :
• கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும்.
• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.