கொத்தமல்லி சட்னியை செய்யும் போது வதக்கி செய்யாமல் அப்படியே பச்சையாக செய்யும் போது, அதன் நிறம், சுவைக் கூடும். மேலும் வைட்டமின் அழியாமல் அப்படியே கிடைக்கும்.
தெவையான பொருட்கள்:
தேங்காய் 1 மூடி, பொட்டுக்கடலை 50 கிராம், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 சிறு துண்டு, உபு தேவையான அளவு.
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கழுவி சிறு துண்டு செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.
செய்முறை:
தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். அரைத்தபின் எடுத்து, தேவையான அளவு தண்ணீர் உப்பு கலக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார்.