20 1448004593 1 smoothskin
சரும பராமரிப்பு

கொத்தமல்லியைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் மூலிகை தான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லி உணவில் நல்ல மணத்தை கொடுப்பதற்கு மட்டுமின்றி, இதில் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கொத்தமல்லியைக் கொண்டு நம் அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

இங்கு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லியைக் கொண்டு சருமத்தில், தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் அழகை விலைமலிவான கொத்தமல்லியைக் கொண்டே பராமரித்து, நன்மைப் பெறுங்கள்.

மென்மையான சருமத்திற்கு.
உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முகப்பருவைப் போக்க.
உங்களுக்கு முகப்பரு தொல்லை இருந்தால், ஒரு கப் நீரில் கொத்தமல்லி, சிறிது சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து, வடிகட்டி அந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்பரு பிரச்சனையை விரைவில் போக்கலாம்.

கரும்புள்ளிகள்
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.

சிவப்பு தடிப்புக்களைப் போக்க..

சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

முடி உதிர்தலுக்கு.
முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்சிசியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

பிங்க் நிற உதடுகளுக்கு.
உங்கள் உதடு கருப்பாக, பொலிவிழந்து உள்ளதா? அப்படியென்றால், இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.

கொத்தமல்லி மாஸ்க்
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
20 1448004593 1 smoothskin

Related posts

கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு

nathan

அழகை மேம்படுத்த சில குறிப்புகள் இயற்கை வழிமுறை…

nathan

சரும வறட்சியினால் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

பண்டைய காலத்தில் வாழ்ந்த பெண்கள் அழகுக்காக இதெல்லாமா பயன்படுத்தியிருக்காங்க தெரியுமா?

nathan

பப்பாளிப்பழ சாறு

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan

சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க ‘இத செஞ்சா போதுமாம்…!

nathan

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

nathan

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம்.

nathan