26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
07 keralaparatha 600
சிற்றுண்டி வகைகள்

கேரளா ஸ்டைல் பரோட்டா ரெசிபி

இந்தியாவில் கேளரா ஸ்டைல் பரோட்டா மிகவும் பிரபலமானது. இந்த பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் மென்மைத்தன்மை தான். அதுமட்டுமல்லாமல், இதில் நெய் சேர்த்து அருமையான முறையில் ஊற வைத்து பரோட்டாக்களாக செய்வதும் தான்.

இத்தகைய மென்மையான பரோட்டாவை சாப்பிட வேண்டுமெனில் கேரளாவிற்கு சென்றால், அதிகம் சாப்பிடலாம். ஆனால் இந்த பரோட்டாவிற்காக கேளரா செல்வதற்கு பதிலாக, இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே! இந்த பரோட்டா செய்ய வேண்டுமெனில் சற்று பொறுமை வேண்டும். ஏனெனில் நன்கு ஊற வைத்து செய்தால் தான், பரோட்டா மென்மையாக இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, ஓமம் மற்றும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்து, 20-25 நிமிடம் நன்கு பிசைய வேண்டும்.

மாவானது நன்கு மென்மையானதும், அதனை ஒரு ஈரமான துணியால் மூடி, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கைகளில் எண்ணெயை தடவிக் கொண்டு, மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.அடுத்து உருண்டைகளை பரோட்டா போன்று தேய்த்துக் கொண்டு, தவாவில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சூப்பரான கேளரா ஸ்டைல் பரோட்டா ரெடி!!! இதனை சிக்கன் குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
07 keralaparatha 600

Related posts

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

ரவா சீடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா…..?

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

சுவையான ஆம வடை

nathan

கஸ்தா நம்கின்

nathan