தேவையானவை:
கேரட் – அரை கிலோ
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 4 கப்
நெய் – அரை கப்
கோவா – 100 கிராம்
ஏலக்காய் – 1 டீஸ்பூன்
குங்குமப்பூ – 1 டீஸ்பூன்
வெள்ளரி விதை – 1 மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு – 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். நான்ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வறுத்துக் கொள்ளவும். பால் சேர்த்து நிதானமாக கேரட்டை கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொள்ளவும். பால் சேர்ந்துவரும் போது சர்க்கரை சேர்த்து கிளற ஆரம்பிக்கவும். இறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து இறக்கவும். வெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.