என்னென்ன தேவை?
கேரட் – 4,
பூண்டு – 5,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டை சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும். அதை ஆறவிட்டு, அதிலிருக்கும் இஞ்சி துண்டுகளை எடுத்து விடவும். கேரட், பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கடாயில் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். பரிமாறும் போது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்துப் பரிமாறவும்.