201706121142300006 papaya solving Hair skin problems SECVPF
முகப் பராமரிப்பு

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி -தெரிஞ்சிக்கங்க…

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி
தேவையான பொருட்கள் :

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 1
உலர்ந்த திராட்சை பழம் – 10

இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

கூந்தல் மாஸ்க் :

பழுத்த பப்பாளி – ஒரு கப்
தயிர் – அரை கப்

பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.

கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது. தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.

30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.

வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Related posts

சருமத்தை மாசில் இருந்து பாதுகாக்க சிறந்த வழிகள்!…..

nathan

வசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்!

nathan

முகத்தை பொலிவடையச்செய்யும் தக்காளி பேஷியல் ஸ்கரப்

nathan

முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா சேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்?

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தை ஸ்க்ரப் செய்வது அவசியம் தான்…. ஆனால் அதனை எப்போது செய்ய வேண்டும் !

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan