ஆலிவ் எண்ணெயைச் சற்று சூடாக்கி, இரவில் படுக்கச் செல்லுவதற்குச் சற்று முன்பாக தலையில் நன்றாகத் தேய்த்து வந்தால், கூந்தலின் நிறம் நல்ல கருமையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, முடி மிக மென்மையாகவும், அமையும்.
இயற்கையாகவே கூந்தலை மிகச் செழுமையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமானால், ‘இ’ வைட்டமின் சத்துள்ள பண்டங்களைச் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனைப்படி தக்க வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்