குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் பன்னீர் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 500 கிராம்
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 7
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 1 ½மேஜைக்கரண்டி
இஞ்சி – 1 ½மேஜைக்கரண்டி
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
கரமசாலா தூள் – 1½ மேஜைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 3
பொரிக்க :
சோள மாவு – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் – 1½ கப்
எண்ணெய் – பொரிக்க
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் லேசாக பொன்னிறமாளதும் இஞ்சி, பூண்டு கலவையை சேர்க்கவும்.
* அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து துருவிய பன்னீரை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
* அடுத்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.
* ஆறிய மசாலாவை நன்றாக கலந்து வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.
* ஒரு கப்பில் சோள மாவுடன் சிறிது நீர் சேர்த்து கலக்கவும்.
* ஒரு தட்டில் பிரட் தூளை பரப்பி வைக்கவும்.
* கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* பன்னீர் கட்லெட் ரெடி.