201705101114003389 how to make Wheat pasta SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா

கோதுமை பாஸ்தா காலையில் சாப்பிட சூப்பரான சத்தான உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கோதுமை பாஸ்தாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா
தேவையான பொருட்கள் :

கோதுமை பாஸ்தா – 1 1/2 கப்
தண்ணீர் – 3 கப்
வெங்காயம் – 1/4 கப்
தக்காளி – 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
பால் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது


how to make Wheat pasta

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதில் பாஸ்தாவைப் போட்டு, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் ஆனதும், அதனை இறக்கி, அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

* பிறகு பால், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

* வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், வேக வைத்துள்ள பாஸ்தாவைப் போட்டு, பாஸ்தாவில் மசாலா நன்கு ஒன்று சேருமாறு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கோதுமை பாஸ்தா ரெடி!!!

Related posts

சுவையான சுண்டல் கிரேவி

nathan

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan

ஓட்ஸ் குழி பணியாரம்

nathan

சுவையான சத்தான வாழைப் பூ துவையல்

nathan

சுவையான மசால் தோசை

nathan

கருப்பட்டி புட்டிங்

nathan

சத்தான அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

nathan

எள்ளு கடக் பூரி

nathan

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan