31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
201704271108068099 Vegetable pasta soup SECVPF
சூப் வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்
தேவையான பொருட்கள் :

பாஸ்தா – 1/2 கப்
வெஜிடேபிள் – 1/4 கப் (பட்டாணி மற்றும் கேரட்)
கொண்டைக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன்
பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை/ஓரிகானோ – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/4 கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவைக்கு

தாளிப்பதற்கு…

வெங்காயம் – 1/2
பூண்டு – 3 பற்கள்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

201704271108068099 Vegetable pasta soup SECVPF

செய்முறை :

* கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

* கேரட் மற்றும் பட்டாணியை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து, பாஸ்தா வெந்ததும், இறக்கி நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் கொண்டைக்கடலை, கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் ஓரிகானோ சேர்த்து, கலவை நன்கு ஒன்று சேர வதக்க வேண்டும்.

* பின் அதில் சூப்பிற்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கும் போது பாஸ்தாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது சூப் பதத்திற்கு வந்ததும் இறக்கி, மேலே மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

* சூப்பரான பாஸ்தா வெஜிடேபிள் சூப் ரெடி!!!

Related posts

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

ஆவகாடோ ஸ்வீட் கார்ன் சூப்

nathan

பசியை தூண்டும் மூலிகை சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan

மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்

nathan

காலிஃபிளவர் சூப்

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

ப்ராக்கோலி சூப்

nathan