தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலைபடும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டு
தேவையான பொருட்கள் :
சிகப்பரிசி அல்லது பச்சரிசி புட்டு மாவு – ஒரு கப்
தேங்காய் துருவல் – அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – இரண்டு தேக்கரண்டி
வாழைப்பழம் – 1
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டியில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து வேக வைத்து எடுக்கவும்.
* வாயகன்ற பாத்திரத்தில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை, தேங்காய்ப்பூ உருக்கிய நெய், வாழை பழம் சேர்த்து நன்றாக விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.
* குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
* சூப்பரான புட்டு பால்ஸ்/லட்டு ரெடி.
குறிப்பு :
* பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து செல்லலாம். ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.
* இதை அரிசி, ராகி (கேழ்வரகு), ரவை, சிறுதானியங்களிலும் தயாரிக்கலாம்.