குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். பிஸ்கட், சாக்லேட் வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு
தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட் – 1 பாக்கெட்
கன்டென்ஸ்ட் மில்க் – அரைக் கப்
கோக்கோ பவுடர் – 4 தேக்கரண்டி
பால் – 2 தேக்கரண்டி
உலர் பழங்கள் – தேவைக்கு
அழகுப்படுத்துவதற்காக :
ரெயின்போ தெளிப்பு(Rainbow spray) – 1 தேக்கரண்டி
சாக்லேட் – அரை கிண்ணம்
தேங்காய் பவுடர் – 4 தேக்கரண்டி
செய்முறை:
* சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.
* உலர் பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கன்டெஸ்ட் மில்க், பால் சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இப்போது இந்த கலவையுடன் பொடியாக நறுக்கியுள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும்.
* இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும். பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும்.
* லட்டுவை, துருவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும். லட்டுவை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து குளிர விடவும்.
* சுவையான பிஸ்கட் லட்டு தயார்.