ffffde
சைவம்

குடைமிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
வெங்காயம் – 1
சிறிய குடைமிளகாய் – 3 (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 3
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் குடை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் போன்றவற்றை வறுத்து எடுத்து ஒரு தட்டில் போட்டு, ஆற வைத்து மிக்ஸியில் ஓரளவு அரைத்து, கரம் மசாலாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் குடைமிளகாய் மற்றும் உப்பை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.
குறிப்பு : வேண்டுமென்றால் இதில் பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவற்றை வேக வைத்து, சேர்த்துக் கொள்ளலாம்.
ffffde

Related posts

காளான் லாலிபாப்

nathan

இட்லி சாம்பார்

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

குடமிளகாய் சாதம்

nathan

சுவையான செட்டிநாடு பலாக்காய் கறி

nathan

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்tamil samayal kurippu

nathan

சுவையான பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan