pNjmhow
சரும பராமரிப்பு

குங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா?

நிறைய அழகுக் குறிப்புகளில் குங்குமாதி தைலம் பற்றிப் படித்திருக்கிறேன். அது என்ன? நிறத்தை அதிகரிக்க உதவுமா? எப்படி உபயோகிப்பது?

ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியதுதான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவி விடலாம்.

எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும்.
குங்குமாதி லேபம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது சருமத்திலுள்ள இறந்த செல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும்.pNjmhow

Related posts

வேனிட்டி பாக்ஸ்: கன்சீலர்

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

sangika

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

மூக்கின் பக்கவாட்டில் கருப்பாக உள்ளதா?

nathan

நயன்தாராவின் அழகிற்கு முக்கிய காரணமான தேங்காய் எண்ணெய்

nathan

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

nathan

உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?

nathan