தேவையான பொருட்கள் :
முளைக்கீரை – 1 கட்டு
தயிர் – அரை கப்
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
மிளகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்து – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை :
• கீரையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் இவற்றைச் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
• கீரையைச் சிறிது தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
• அரைத்த கலவை, பெருங்காயம் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
• ஆறியதும் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
• மற்றொருக கடாயில் அரை ஸ்பூன் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும்.
• இது சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.