26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
karuvadu thokku 20 1471681076 1
​பொதுவானவை

கிராமத்து கருவாட்டு தொக்கு

உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு கிராமத்து கருவாட்டு தொக்கு சமையலை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கருவாடு – 10 துண்டுகள் பூண்டு – 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, கருவாட்டை சேர்த்து மசாலாவுடன் சேர்த்து 5-6 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் 1-2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், கிராமத்து கருவாட்டு தொக்கு ரெடி!!!karuvadu thokku 20 1471681076

Related posts

சீஸ் பை

nathan

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள்

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

tamil name | தமிழ் பெயர்

nathan

மட்டன் ரசம்

nathan

கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள்

nathan

ஓம பொடி

nathan

சூப்பர் டிப்ஸ்! வற்றல் குழம்புனா இப்படி தான் இருக்கனும்…!

nathan