சுவையான பார்த்தவுடன் மனதை மயக்கும் காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா அசைவ பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். காரம் அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு இது விருந்தாக அமையும்.
தேவையான பொருட்கள்
* மட்டன் – 1 கிலோ
* வரமிளகாய் – 10
* வெங்காயம் – 3
* பட்டை – 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
* சீரகம் – 1 ஸ்பூன்
* சோம்பு – 1/2 ஸ்பூன்
* புளி பேஸ்ட் – 1 ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
செய்முறை
* முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு அதை பொன்னிரமாக வதக்கவும்.
* பின்னர் பொன்னிரமாக வதங்கிய வெங்காயத்துடன் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்ட வேண்டும்.
* மேலும் அதனுடன் பட்டை, ஏலக்காய், சோம்பு பொடி, சீரகப் பொடி, மற்றும் மட்டன் மசாலாவை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு பிரட்டி எடுக்கவும்.
* சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் அதனை வேக வைக்கவும்.
* குக்கரில் 2 விசில் விட்டு பின் அதனை இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரில் விதை நீக்கிய வரமிளகாய்களை போட்டு மென்மையாக வேகவைத்து அதன் நீரை முற்றிலுமாக வடித்து பின் மிளகாயை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ளவும்.
* மிளகாய் பேஸ்டுடன் புளிச்சாற்றினையும் சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி அதன் பச்சை வாசம் நீங்கி மட்டனுடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
* இப்போது சுவையான காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா தயார்.