sl3846
சைவம்

காளான் லாலிபாப்

என்னென்ன தேவை?

பட்டன் காளான்- 10,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் – சிறிது,
எலுமிச்சைச்சாறு – 1/2 மூடி,
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10-15,
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
ஃபுட் கலர் – விருப்பமானது.

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயம் தோல் உரித்து, அரிந்து மிக்ஸியில் சோம்பு சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு இந்த அரைத்த விழுதை வதக்கி, தக்காளி சாஸ், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மூன்று மாவுடன் பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், மாங்காய் தூள் விருப்பமான ஃபுட் கலர் போட்டு கிளறி இதில் வதக்கிய மசாலாவைப் போட்டு கிளறி இறக்கி வைத்து எலுமிச்சைச்சாறு பிழியவும். இதில் காளானைப் போட்டு1 மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு சூடான எண்ணெயில் காளானைப் போட்டு பொரித்தெடுக்கவும். நறுக்க வேண்டாம். வெந்த காளான் அடியில் டூத் பிக் அல்லது லாலி பாப் ஸ்டிக் சொருகி குழந்தைகளுக்கு தரலாம். சத்துள்ள வித்தியாசமான ஸ்நாக்ஸ் இது. sl3846

Related posts

சூப்பரான சைடிஷ் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

சூப்பரான வடை மோர் குழம்பு

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

பக்கோடா குழம்பு

nathan

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

nathan

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

தக்காளி பட்டாணி சாதம்

nathan