கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு
தேவையான பொருட்கள் :
கருணைக்கிழங்கு – கால்கிலோ
தேங்காய் – கால் முடி
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பூண்டு – ஒன்று
புளி – எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள் – ஒரு மேசைக் கரண்டி
மஞ்சத்தூள் – அரைத் தேக்கரண்டி
தனியாத்தூள் – இரண்டு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் – தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
கடுகு – ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – இரண்டு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
செய்முறை :
* கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.
* தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
* புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
* பூண்டை நசுக்கி வைக்கவும்.
* தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து புளிக்கரைசலில் சேர்த்து நன்கு கரைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு தேவையான நீரை ஊற்றி கலக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கிய பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
* புளி கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.
* பின்பு அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
* குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி.