தற்போது சாதாரணமாய் விசேஷங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பெண்கள் தங்கள் கழுத்தை அலங்கரிக்கும் பிரம்மாண்ட அணிகலன்களையே அணி விரும்புகின்றன.
கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்
நவநாகரீக மங்கையர்கள் அணியக்கூடியவாறு நவீன வடிவமைப்பு நகைகள் பலவிதமாய் விற்பனைக்கு வருகின்றன. இன்றைய நாளில் பெண்கள் அணிகலன்களிலேயே அதிக எடையும், பெரிய பாந்தமான வகையிலான நகைகள் என்றால் கழுத்தில் அணியக்கூடிய நகைகள்தான். அடுக்கடுக்காய் கழுத்தை அலங்கரிக்கும் அணிகலன்களின் அணிவகுப்பு என்பது பெரிய அளவில் உள்ளது.
வசதி படைத்த பெண்கள் தங்கள் திருமணத்தின்போது கழுத்து நெக்லஸில் ஆரம்பித்து இடுப்பு ஒட்டியாணம் வரை ஒவ்வொரு அடுக்காக அணிகலன்களை அணிந்திருப்பர். தற்போது சாதாரணமாய் விசேஷங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பெண்கள் தங்கள் கழுத்தை அலங்கரிக்கும் பிரம்மாண்ட அணிகலன்களையே அணி விரும்புகின்றன.
கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகொடி அல்லது செயின் போன்ற நகைகளை தவிர்த்து கழுத்து அட்டிகை, நெக்லஸ், சற்று கீழறிங்கி பதக்கம் வைத்த மாலைகள், மணி மாலைகள், காசு மாலைகள் அதற்கு அடுத்து ஆரம் என்றவாறு பட்டையான செயின் மற்றும் பரந்து விரிந்த பதக்க அமைப்பு நகைகள் உள்ளன. இவையனைத்தும் இன்றைய நாளில் விதவிதமான டிசைன்கள் உள்ளன.
செட் நகைகள் எனும்போது ஒரே மாதிரியான வண்ணகல் வைத்த அமைப்பு, பதக்க அமைப்பு, செயின் அமைப்பு என்றவாறு அனைத்தும் ஒரு மாதிரியாக இருக்கும். ஆனால் அவை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப அணியக்கூடிய அளவில் சிறிய, பெரியது அதை விட பெரியது என்றவாறு இருக்கின்றன.
அழகிய தோற்றத்தை ஏற்படுத்தும் கழுத்தணி நகைகள் :
பெண்களுக்கு ஓர் அழகிய தோற்றத்தை தருபவையே கழுத்தணி நகைகள்தான். பெரிய காதணியும், எத்தனை ஜோடி வளையல்கள் போட்டு பெண் வந்தாலும் எடுபடாது. கழுத்தில் அணியும் நகைகள் தான் பெண்களை அனைவருக்கும் முகப்பிட்டு காட்டுகின்றன. இன்றைய நாளில் இதன் காரணமாக மெல்லிய தகடு மைப்பு மற்றும் எடை குறைந்த கழுத்தணி நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்ற அமைப்பில் உருவாக்கப்படுகின்றன.
ஏனெனில் அதிக எடை எனும்போது நீண்ட நேரம் அணிவது கடினம். மேலும் அதனை கையாள்வதும் கடினம். அத்துடன் விலையும் கூடுதல், அதற்கேற்ப பாதுகாப்பும் அவசியம். இதனை நீக்கும் பொருட்டே எடை குறைந்த பாந்தமான கழுத்தணி நகைகள் செய்யப்படுகின்றன. இவை பெரிய நகைகள் போன்று காட்சியளிப்பதுடன், ஒவ்வொரு சிறு பகுதியும் ஏராளமான கலை வேலைப்பாட்டு அமைப்புடன் அற்புதமாக திகழ்கின்றன.
புதிய வகை மாலை அமைப்பு நகைகள் :
முன்பு பழங்காலத்தில் காசு மாலை மட்டுமே மாலை அமைப்பு நகைகளாக இருந்தன. பின்பு மாங்காய் மாலை பிரபலமானது. இன்றைய நாளில் இம்மாலைகள் அழகிய உருளைகள், வண்ண பூச்சுக்கள் நிறைவாறு அன்னம், மணி, பட்டை அமைப்புகள் உள்ளவாறு நீண்ட மாலை அணைப்பு. அதில் அழகிய பதக்கம், மணித்தொங்கட்டான், தோரண தொங்கட்டான் என்றவாறு வடிவமைத்து தரப்படுகின்றன.
முன்பு டாலர் செயின் போட்டது போன்று மெல்லிய பட்டை வடிவ செயின் அமைப்பில் எனாமல் பூசப்பட்ட பதக்க அமைப்பு மாலைகளும் வருகின்றன. நெக்லஸ், மாலை, ஆரம், மூன்றின் பட்டை செயின் அமைப்பு ஒரே மாதிரியாகவும் மணி தொங்கல், கல் தொங்கல், இறை உருவ பதக்க அமைப்பு என பதக்கங்கள் மாறி மாறி வரும் செட் நகைகளும் உள்ளன. பதக்கங்கள் முத்திரை அமைப்பு மற்றும் அன்னம், மயில், பியர் அமைப்புகளில் வருகின்றன.