பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான பொடுகு தலையில் இருந்தால், அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். கற்றாழை ஜெல் பொடுகைப் போக்குவதில் சிறந்தது. இங்கு பொடுகைப் போக்க கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்..
* கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் போது நேரடியாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தா பொடுகு நீங்கி, முடி உதிர்வதும் குறையும். குளிர்ந்த தேகம் உள்ளவர்கள், சளி தொல்லை இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.
* டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், அது பொடுகைப் போக்க உதவும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லில், 6 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.
* 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 10 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், விரைவில் பொடுகைப் போக்கலாம்.
* எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் தன்மை, பொடுகை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, ஸ்கால்ப்பின் pH அளவை சீராக வைத்துக் கொள்ளும். அத்தகைய எலுமிச்சையை கற்றாழையுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டால், பொடுகு விரைவில் போய்விடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.