தினசரி கிளென்சிங் செய்யுங்கள்
தினசரி உங்கள் சருமத்தை தூய்மை படுத்துவதால் சரியான மேக்கப் குறிப்புகள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆகவே கருமை நிறம் கொண்டவர்கள் தொடர்ந்து க்ளென்சிங் முறையால் சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். க்ளென்சிங் அல்லது மாய்ச்சரைசிங் செய்வதை புறக்கணிக்கும்போது உங்கள் சருமத்தில் திட்டுகள் தோன்றும். இதனால் சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வது முக்கியமாகிறது. ஒரு மென்மையான மேக்கப்பிற்கு சீரான சரும நிறம் தேவை என்பதை கருப்பு நிறத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
சரியான பவுண்டேஷன்
கருமை நிறத்தில் உள்ளவர்கள் முடிந்த வரையில் அவர்கள் நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். க்ரீம் அல்லது திரவம் எந்த நிலையிலும் பவுண்டேஷன் இருக்கலாம். அடர்ந்த நிறங்கள் கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் நிறத்திற்கு எடுப்பாக இருக்காது. பவுண்டேஷன் கனமாக போடுவதை தவிர்க்கவும். லைட் ஷேடு பவுண்டேஷன் உங்கள் நிறத்திற்கு பொருந்தாது.
கண் மேக்கப்
க்ரீம் சார்ந்த லைனரை பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தொடு ஒன்றி இருக்கும் . இதனால் ஒரு இயற்கையான தோற்றம் பெறலாம். ஐ ஷடோவிற்கு அடர்ந்த நிறங்களான ப்ரூன், பர்கண்டி, காப்பர் போன்றவற்றை பயன்படுத்தலாம். மெட்டாலிக் ஷேடு மூலம் உங்கள் கண்களை இன்னும் கவர்ச்சியாக மாற்றலாம்.
ப்ளஷ்
தேர்வு டார்க் பீச், வெண்கலம், டீப் ஆரஞ்சு, கோரல், ஒயின், ரோஸ் மற்றும் கோல்ட் போன்ற எந்த வகை அடர் ஷேடிலும் ப்ளஷ் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு மிகவும் ஏற்றது.
உதடு நிறம்
பளபளப்பு இல்லாத மற்றும் பளபளப்பான லிப் கலர், கருப்பு நிறத்திற்கு எடுப்பாக இருக்கும். விறைப்பான ஷேடுகளை தேர்வு செய்யலாம். பெர்ரி, ப்ளம்ஸ், பர்கண்டி, போன்ற அடர் ஷேடுகளை தேர்வு செய்யலாம். ஆனால் லிப் கலர் பயன்படுத்தாத வெற்று உதடுகள் இன்னும் அழகாக இருக்கும். உங்கள் உதடுகள் கருமையாக இருப்பதாக உணர்ந்தால் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய அளவு பவுண்டேஷன் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் நிறம் பளிச்சென்று இருக்கும். பழுப்பு, மரூன், மகோகனி, போன்ற நிறங்களை தவிர்க்கலாம். இந்த நிறங்களை பயன்படுத்துவதால் உங்கள் முகம் மேலும் கருமையாக தோன்றலாம்.
கன்சீளர்
உங்கள் சரும நிறம் சீராக தோன்றுவதற்கு கன்சீளர் பயன்படுத்தலாம். கருமை நிற சருமம் உள்ளவர்கள் பளிச் நிறங்களான சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களை தேர்வு செய்யலாம். லூஸ் பவுடர் பயன்படுத்தி இதனை லைட்டாக மாற்றிக் கொள்ளலாம்.
சன்ஸ்க்ரீன்
கருமையான சருமம் உள்ளவர்களும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர் தாக்குதலால் சேதமடையலாம். உங்கள் சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீன் பயனடுத்துவது நல்லது. இதனை கருமை நிறம் உள்ளவர்களும் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.
பவுடர்
கருமை நிற சருமம் உள்ளவர்கள் பவுடர் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள், பெரிய பவுடர் பிரஷ் பயன்படுத்தி ட்ரான்ஸ் லுசென்ட் பவுடர் பயன்படுத்தலாம்.
நக பாலிஷ்
கருமை நிறம் உள்ளவர்கள் மேக்கப் ஷேடுகள் போல், அடர்ந்த நிறத்தில் நகத்திற்கு பாலிஷ் போட வேண்டாம். ஷைனி பிரான்ஸ், கூல் க்ரீன், பர்பிள் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.
ஹேர் கலரிங்
ஹேர் கலரிங் செய்யும்போது அடர் நிறங்களை தேர்வு செய்வது நல்லது. செர்ரி, கார்நெட், பர்கண்டி போன்ற நிறங்கள் ஏற்புடையதாக இருக்கும்.