உதடுகள் சிலருக்கு இயற்கையிலேயே வசீகரமாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வறட்சி, வெயிலினால் உதடு கருத்து, வெடிக்கும். அதனை மறைக்க லிப்ஸ்டிக் போடுகிறோம்.
லிப்ஸ்டிக்கில் கெட்டுப்போகாமல் இருக்க பாராபின் சேர்ப்பார்கள்.
இது உங்கள் உதட்டில் மேலும் கருமையை கொடுத்துவிடும்.
பிறகு எப்போதும் லிப்ஸ்டிக் இல்லாமல் இருக்க முடியாது.
முந்தைய காலத்தில் லிப்ஸ்டிக் இயற்கையாக தயாரிப்பார்கள். குங்குமப் பூ, பீட்ரூட், மாதுளை மற்றும் அதில் பெட்ரோலியம் ஜெல்லி, தேன் மெழுகு ஆகியவற்றால் செய்யப்படும் இயற்கையான லிப்ஸ்டிக் அழகு நிறத்தை உங்கள் உதடுகளுக்கு தரும். அதோடு இயற்கையான நிறத்தை உங்களுக்கு தரும். உதடுகளில் உண்டாகும் பிரச்சனைகளை நிறுத்தி, இயற்கையான முறையில் எப்படி சிவப்பாக்கலாம். தொடர்ந்து படியுங்கள்.
சிவந்த உதடு பெற : பாலேடு எடுத்து அதில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதட்டில் உண்டாகும் கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெடிப்பை குணப்படுத்த : உதட்டு வெடிப்பிற்கு வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து உதடுகளில் தடவுங்கள். வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் : முகத்தில் இருப்பது போல உதடுகளிலும் இறந்த செல்கள் இருக்கும். ஒரு பருத்தித் துணியால் உதட்டை துடைத்து பாருங்கள். அழுக்கு, சருமத் துகள் வரும். இதனை போக்க இந்த ஸ்க்ரப் உபயோகியுங்கள்.
தேங்காய் எண்ணெய் – 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன் தேன் -அரை ஸ்பூன் சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை கலக்குங்கள். நன்றாக கலந்ததும் அதனைக் கொண்டு, உதட்டில் தேயுங்கள். தினமும் செய்யலாம் அல்லது வாரம் 3 முறை செய்யலாம். ஒரே வாரத்தில் மிருதுவான உதடு கிடைக்கும்.
லிப் பாம் செய்ய : அடர்ந்த பிரவுன் நிற உதடு ஆடம்பரமான உடுப்புகளுக்கு அழகாய் தெரியும். இந்த லிப் பாம் அடர்ந்த நிறத்தை தரக் கூடியது.
விசேஷங்களுக்கு போட்டுக் கொள்ளுங்கள். அதோடு இவை வெய்யிலினால் உண்டாகும் கருமையை தடுக்கிறது. ஈரப்பதம் அளிக்கும். சிவப்பான உதடுகள் பெறலாம்
தேவையானவை : நாட்டுச் சர்க்கரை – 2 டீ ஸ்பூன் வெள்ளை சர்க்கரை – 1 டீ ஸ்பூன் கோகோ பட்டர் – அரை டீ ஸ்பூன் தேன் -1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் – 2-3 துளிகள்
லிப் பாம் செய்ய : தேன், பாதாம் எண்ணெய் மற்றும் கோகோ பட்டரை முதலில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சர்க்கரையையை பொடி செய்து கலக்கவும்.
ஒரு 10 நொடிகள் கலந்துவிட்டு, பின்னர் உதட்டில் தடவுங்கள். மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை மெதுவாக பருத்தித் துணியால் ஒத்தி எடுக்கவும்.
அதனை லிப் பாமாக போட்டுக் கொண்டாலும் நல்லது. குறிப்பாக கோகோ பட்டரை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். கோகோ கலந்த க்ரீம் உபயோகிக்க வேண்டாம்.
லிப்ஸ்டிக் தயாரிக்க : தேவையானவை : மாதுளை சாறு – அரை கப் தேன் மெழுகு – 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்சில துளி.
மாதுளை சாறை எடுத்து அதில் தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெயை கலக்குங்கள். 1 மாதம் ஃப்ரீஸரில் வைக்கவும். பின்னர் எடுத்து உபயோகியுங்கள். மாதுளைக்கு பதிலாக பீட்ரூட் சாற்றையும் பயன்படுத்தலாம்