கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
கருவாடு – 100 கிராம்
தக்காளி – 2 பெரியது
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை , – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
* கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டி வைக்கவும்.
* கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
* அடுத்து கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி.