தேவையான பொருட்கள் :
பெரிய கத்தரிக்காய் – 5,
தக்காளி – 2,
புளி – கோலிக்குண்டு அளவு,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க :
எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 4,
காய்ந்த மிளகாய் – 2,
துருவிய தேங்காய் – 1/4 மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.
செய்முறை:
• தக்காளி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கத்தரிக்காயை நன்றாகக் கழுவி, காம்பை மட்டும் எடுத்து விட்டு சுற்றிலும் எண்ணெய் தடவவும். ஸ்டவ்வில் நெருப்பில் வாட்டவும். தோல் நன்றாகக் கருகும் அளவுக்கு வாட்ட வேண்டும். அதை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் தோலை நீக்கி சதையைத் திறந்து பூச்சி, புழு எதுவும் இல்லை என்பதை பார்த்துவிட்டு தனியாகப் பிசைந்து வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
• பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
• பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
• காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும்.
• நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கியதும் புளிக் கரைசலையும் சேர்க்கவும்.
• கத்தரிக்காய் பிசைந்து வைத்ததை சேர்த்து உப்பு போடவும்.
• கொத்தமல்லி இலை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.