கண்டதிப்பிலி ரசம்
தேவை:
புளி – தேவைக்கு,
உப்பு, மஞ்சள்பொடி,
தாளிக்க கடுகு, நெய், கறிவேப்பிலை.
வறுத்துப் பொடிக்க:
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி,
தனியா – 2 தேக்கரண்டி,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 4,
கண்ட திப்பிலி – 10 கிராம்,
சுக்கு – சிறிதள,
பெருங்காயம் – தேவைக்கு.
செய்முறை:
வறுக்க வேண்டியவற்றை சிறிதளவு நெய்விட்டு வறுத்து, கரகரப்பாகப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.கடாயில் புளிக்கரைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடிசேர்த்து, புளி வாசனை போக கொதித்த பின்,வறுத்துப் பொடித்ததைச் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.பிறகு தேவையான அளவு தண்ணீர், கறிவேப்பிலை சேர்த்து கொதி விடாமல் நுரைத்து வந்தவுடன் நெய்யில் சிறிதளவு கடுகு தாளித்துக் கொட்டவும். கொஞ்சம்
வெல்லம் சேர்த்தால், காரம் அதிகம் இருக்காது.