27.5 C
Chennai
Saturday, Sep 28, 2024
cfis
அசைவ வகைகள்

கணவாய் மீன் வறுவல்

சுவையான கணவாய் மீன் வறுவல் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

கணவாய் மீன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகதூள் – 2 ஸ்பூன்
எண்ணெய்
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை.

செய்முறை :

* கணவா மீனை சுத்தமாக ஆய்ந்து கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளுங்கள்.

* ஒரு வாணலில் கணவா மீனை போட்டு அதனுடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.

* கணவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிடவும். இப்படிக் கொட்டிவிடுவதால் கணவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும். இப்போது அதை தனியாக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தபின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின் அதில் வேக வைத்த கணவா மீனை சேர்த்து சிறிது வதக்கிய பின், மிளகாய்த்துாள், சீரகப்பொடி, சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும்.

* நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.

* கணவாய் மீன் வறுவல் தயார். cfis

Related posts

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

விருதுநகர் மட்டன் சுக்கா

nathan

சுவையான சிக்கன் குருமா!…

sangika

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

இறால் வறுவல்: செய்முறைகளுடன்…!

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

முட்டை பெப்பர் ஃபிரை

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan