வெளிப்புற தோற்றமும் நீங்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது. உங்களது சருமத்திற்கு நீங்கள் தேர்வு செய்யும் அழகு சாதன பொருட்களை போல உங்கள் சாப்பாட்டையும் நீங்கள் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
நீங்கள் இரவு நேரங்களில் ஜங்க் புட் உண்பவராக இருந்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதாவது முகப்பரு, வீங்கிய கண்கள் போன்ற பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அதனால் நீங்கள் சாப்பிடும் உணவை சரி பார்த்து உண்ண வேண்டும்.நீங்கள் சாப்பிடும் உணவுக்கு முதலில் காலா அட்டவணை தயார் படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் அவற்றை தினமும் பின்பற்றிக்கொள்ளுங்கள். இப்போது தவறான உணவு பழக்கத்தால் வெளிப்படும் பிரச்சனைகளை பார்ப்போம்.
உங்கள்சருமத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுகிறதா அப்போ இத படிங்க.
முகப்பரு
சிலருக்கு அதிக பிரச்சனையாக இருப்பதே முகப்பரு தான். நீங்கள் மறுநாள் வெளியே செல்லவோ அல்லது விஷேசத்திக்கு செல்லவோ திட்டமிட்டு இருக்கும் போது இந்த முகப்பரு வந்து விடுகிறதா அப்போது கண்டிப்பான முறையில் உங்கள் உணவில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நீங்கள் உண்ணும் உணவில் அதிக படியான அயோடின் இருப்பதால் தான் முகப்பரு ஏற்படுகிறது. எனவே நீங்கள் உண்ணும் உணவில் உள்ள அயோடின் அளவை சரி பார்த்து உண்ணுங்கள்.
வயதாவதன் ஆரம்ப அறிகுறிகள்
முதுமை தோற்றம் என்பது ஒரு இயற்கை செயலாகும். இதனை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால் முதுமை தோற்றம் மிக விரைவில் ஏற்படுவதை நீங்கள் குறைக்கலாம். நீங்கள் உண்ணும் உணவை வெகு விரைவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உணவினை மெதுவாக மெல்லி சுவைத்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகிய புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உங்கள் செரிமான அமைப்பு எடுத்து கொள்ளும். இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லையெனில் உங்கள் உடல் மிக விரைவில் வயதான தோற்றத்தை பெறும்.
உங்களது வறண்ட சரும விரிசல்களினால் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளீர்களா? அப்போது நீங்கள் தினமும் அதிக அளவிலான தண்ணீர் பருக வேண்டும். உங்களால் தண்ணீர் பருக முடிய வில்லையெனில் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற அதிகம் நீர் நிறைந்த உணவுகளை உண்ணலாம். உங்கள் சருமத்தை நீர்யேற்றத்துடன் வைப்பதில் உங்கள் உணவும் முக்கிய பங்கு வைக்கிறது.
வீங்கிய கண்கள்
நாம் மற்றவர்களிடம் பேசும் போது முதலில் அவர்கள் நாம் கண்களை பார்த்துதான் பேசுவார்கள. அந்த கண்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். உங்களது கண்கள் அல்லது முகம் வீங்கியது போல இருந்தால் உங்கள் உடலில் நல்ல கொழுப்புகள் இல்லை என்றே அர்த்தம். விதைகள் மற்றும் சுத்தமான எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் தோல் அழற்சியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
சரும வெடிப்பு
உங்கள் தோலின் நடுப்பகுதி கிழிவதினால் இத்தகைய சரும வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பு உங்கள் உடலில் உள்ள ஜிங்க் அதாவது துத்தநாகம் குறைவதினால் ஏற்படுகிறது. இதனை நீங்கள் சரி செய்ய துத்தநாகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அதாவது முந்திரி, பாதம் பருப்பு, தயிர், ஆடு இறைச்சி ஆகியவை துத்தநாகம் நிறைத்த உணவுகள் ஆகும்.