தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம்-1
குடமிளகாய்-1
தக்காளி -2
பனிர் -250 gms
சிவப்பு மிளகாய்த்தூள்- சிறிதளவு
கொத்தமல்லி இலை அலங்கரிக்க
கரம் மசாலா சிறிதளவு
உப்பு
சர்க்கரை
பட்டர் -1 ஸ்பூன்
வறுத்து அரைக்க
சிவப்பு மிளகாய் -5
தனியா -2 டேபிள் ஸ்பூன்
சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
சோம்பு-1 டேபிள் ஸ்பூன்
மிளகு-1 டேபிள் ஸ்பூன்
கசூரி மெய்தி -சிறிதளவு
வறுக்க மேலே கொடுத்து உள்ள கசூரி மெய்தி தவிர மற்ற பொருள்களை வெறும் கடாயில் பொன் நிறமாக வறுக்கவும்.அடுப்பை அனைத்து விட்டு அதே சூட்டில் கசூரி மெய்தி சேர்த்து வறுக்கவும்.ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைக்கவும்.பாதி மசாலா கொர கொரப்பாகவும்,பாதி நைசாகவும் அரைக்கவும்.
செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் போடவும்,தீ குறைந்த அளவு இருக்க வேண்டும்.
பின் நைசாக அரைத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கடாய் மசாலாவை போட்டு பின் சிறிது மிளகாய்த்தூள், கரம் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து விடவும்.பின் சதுரமாக கட் செய்து வைத்துள்ள வெங்காயம் ,குடமிளகாய்,உப்பு போட்டு வதக்கவும் .பின் தக்காளி விழுது (கொதிக்கும் தக்காளி போட்டு ஆறிய பின் தோலை எடுத்து மிக்ஸ்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்)போட்டு எண்ணை பிரியும் வரை ஹை flame இல் வைத்துவதக்கவும் .
மசாலா ரெடி ஆனவுடன் பொரித்து வைத்துள்ள அல்லது பொரிக்காத பன்னீரை (இது உங்கள் விருப்பம் போல் ) போட்டு கலக்கவும்.தக்காளியின் புளிப்பு சுவையை குறைக்க 1 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
பின் சிறிது கொர கொரப்பாக அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை சேர்க்கவும்.இன்னும் இந்த டிஷ்யை ரிச் ஆக மாற்ற விரும்பினால் உங்களிடம் கிரீம் இருந்தால் சேர்க்கலாம் அல்லது பால் ஏடு சேர்த்து வைத்து இருந்தால் அதை மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி போடலாம்
பின் பொடிதாக அரிந்த கொத்தமல்லி இலை, சேர்த்து அலங்கரிக்கவும்.