32.8 C
Chennai
Monday, Sep 30, 2024
EAmEbLN
சைவம்

ஓம மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 10,
சிறிது புளிப்பு உள்ள மோர் – அரை லிட்டர்,
ஓமம் – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய் துருவல் – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
* ஓமம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
* அரைத்ததை மோருடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
* வெண்டைக் காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பிரவுன் நிறமாகும் வரை வதக்கவும்.
* இதை மோர் கலவையுடன் கலந்து, லேசாக சூடாக்கி, கொதிக்க ஆரம்பித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
* சுவையான சத்தான ஓம மோர்க் குழம்பு ரெடி. அதை அப்படியே குடிக்கவும். வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.EAmEbLN

Related posts

சப்ஜி பிரியாணி

nathan

சூப்பரான பச்சை பட்டாணி மசாலா

nathan

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

nathan

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

பீர்க்கங்காய் புலாவ்

nathan

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan