காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்
தேவையான பொருட்கள் :
பொன்னி புழுங்கல் அரிசி – 1 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1 கப்
தண்ணீர் – 5 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
புளி – எலுமிச்சையளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
முருங்கைக் கீரை – 1 கப்
அரைக் கீரை – 1 கப்
முருங்கைக்காய் – 1
அவரைக்காய் – 10
கொத்தவரங்காய் – 10
கத்தரிக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க :
தேங்காய் துருவல் – கால் கப்
வத்தல் மிளகாய் – 4
கடலைபருப்பு – 2 ஸ்பூன்
தனியா – 4 ஸ்பூன்
செய்முறை :
* அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.
* முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும்.
* வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
* புளியை கரைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் கழுவிய அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
* கடைசியாக வறுத்து அரைத்த பொடியை போட்டு 2 நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் .ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாதத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
* சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம் ரெடி.