விளக்கெண்ணெய் என்றாலே சமைப்பதற்கும் விளக்கொளிக்கு பயன்படுவது பற்றி தான் ஞாபகமே வரும். ஆனால் உங்களுக்கு தெரியுமா இது அழகு பராமரிப்பிலும் தன் காலை பதிய வைத்துள்ளது.
ஆமாங்க கூந்தல் பராமரிப்பிலிருந்து அழகிய பொலிவான முகத்தை பெற என்று அத்தனையிலும் விளக்கெண்ணையின் பங்கு மிக அதிகம்.
விளக்கெண்ணெய் நாம் தான் அதனுடைய அருமை தெரியாமல், பயன்படுத்துவதில்லை. சிலருக்கோ அருஐம தெரிந்தாலும் கையில் தொடும்போது பிசுபிசுவென்று இருக்கும் என்று அந்த பக்கமே போவதில்லை. கையில் தொட்டுதான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. காட்டனில் தொட்டே சருமத்திலும் தலையிலும் அப்ளை செய்ய முடியும். ஏன், கையில் தொட்டால் தான் என்ன?… கண்ட கெமிக்கல்களால் ஆன கிரீம்களை கையில் தொடுகிறோம். இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமான எண்ணெயை கையில் தொட்டால் என்ன ஆகும்?… இதை மனதில் வைத்துக் கொண்டாலே தேவையில்லாத பாசாங்குகளை செய்ய மாட்டோம். சரி, விளக்கெண்ணையை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பயன்கள் அழகான தீஞ்சுவை உதடுகள் பெற, உங்களுக்கு நல்ல ஆரஞ்சு பழச்சொலை போன்ற உதடுகள் வேண்டுமா. அப்போ இந்த விளக்கெண்ணெய் கையில் இருந்தால் போதும். இவை உதடுகளை ஈரப்பதமாக்கி மென்மையாக பட்டு போன்று நல்ல கொழுத்த உதடுகளை கொடுக்கிறது.
பயன்படுத்தும் முறை 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை படுப்பதற்கு முன் இரவில் தூங்கும்முன் உங்கள் உதட்டில் தேய்த்து விட்டு படுங்கள். அதே மாதிரி காலையில் எழுந்ததும் இதை மறுபடியும் செய்யுங்கள். இது மிகமிகக் குறைந்த விலையில் உங்களுக்குக் கிடைக்கும் லிப் பாம் தான் இந்த விளக்கெண்ணெய். இது மிகத் துரிதமாகச் செயல்பட்டு உங்கள் உதடுகளை அழகாக மாற்றுகிறது.
பயன்படுத்தும் முறை 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை படுப்பதற்கு முன் இரவில் தூங்கும்முன் உங்கள் உதட்டில் தேய்த்து விட்டு படுங்கள். அதே மாதிரி காலையில் எழுந்ததும் இதை மறுபடியும் செய்யுங்கள். இது மிகமிகக் குறைந்த விலையில் உங்களுக்குக் கிடைக்கும் லிப் பாம் தான் இந்த விளக்கெண்ணெய். இது மிகத் துரிதமாகச் செயல்பட்டு உங்கள் உதடுகளை அழகாக மாற்றுகிறது.
புருவழகு நீங்கள் என்ன தான் கண்களுக்கு பல மேக்கப் போட்டாலும் பொருத்தமான அழகான புருவம் இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. எனவே அழகான கருமையான புருவம் பெற விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் புருவங்களில் தடவி வந்தாலே போதும் வியத்தகு மாற்றத்தை பெறலாம். வில் போன்ற புருவ அழகால் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்க முடியும்.
க்ளீன்சர் இது ஒரு இயற்கை க்ளீன்சர் மாதிரி செயல்படுகிறது. உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு நல்ல பொலிவையும் மினு மினுப்பையும் தருகிறது.
பயன்படுத்தும் முறை ஒரு காட்டன் பஞ்சில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை நனைத்து முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். முகத் துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை தரும். நன்றாக முகத்தில் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சரும மாய்ஸ்சரைசர் இதை ஒரு சரும மாய்ஸ்சரைசர் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கைகளில் எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த ஆயிலை முகத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து சருமம் நன்றாக உறிஞ்சும் வரை காத்திருங்கள். மற்றொரு கையில் ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கொள்ளுங்கள். அதைக் கொண்டு முகத்தை ஒத்தி எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் இதைச் செய்யுங்கள். பின்னர் அந்த துணியை கொண்டு ஸ்க்ரப் மாதிரி நன்றாக தேய்க்க வேண்டும். ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
கூந்தல் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை இரவில் படுப்பதற்கு முன் தலை மற்றும் கூந்தலில் தேய்த்து விடிகாலையில் சாம்பு கொண்டு அலசி வந்தால் நல்ல அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
இமைகள் நல்ல அடர்த்தியான கண் இமைகளை பெற நீங்கள் விரும்பினால் விளக்கெண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வந்தால் போதும். இனி செயற்கை இமைகள் உங்களுக்கு தேவைப்படாது. விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒரு விலை மலிவான, இயற்கையாக எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத விளக்கெண்ணையைப் பயன்படுத்தி உங்கள் இமைகளை வில் போன்று அழகாக்கிக் கொள்ள முடியும்.