28.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
face1 3
அழகு குறிப்புகள்

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக ஸ்க்ரப் செய்யலாம் முயன்று பாருங்கள்….

FASTNEWS|COLOMBO) எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

* சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.

தேவையான பொருட்கள்
*எலுமிச்சை சாறு – 6 மேசைக்கரண்டி
*சர்க்கரை – 2 மேசைக்கரண்டி

ஒரு பௌலில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வட்டமாக மசாஜ் செய்யவும். சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். கரும்புள்ளிகள் மற்றும் கருமை நிறத்தை போக்க இந்த ஸ்க்ரப் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
*தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
*சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரபை முகத்தில் 10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

Related posts

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

nathan

புதினுக்கு இவ்வளவு நோய்களா.! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

nathan

பச்சை வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற

nathan

ஃபயர் ஹேர்கட் முறையில் இளைஞருக்கு நேர்ந்த கதி -வீடியோ

nathan

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

sangika

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika