தேவையான பொருட்கள்
எலும்பு கறி – அரைக்கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
மல்லி தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகு, சீரகம், அரைத்தது – 2 ஸ்பூன்
தேங்காய் விழுது – அரை மூடி
எண்ணைய் – 3 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய
உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள்,
இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளரவும்
பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும்
வரை வதக்கவும். இத்துடன் அரைத்த தேங்காய் விழுது ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும்.
4 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும். விசில் இறங்கிய உடன் சிறிது மல்லி தழை போட்டு ாரிமாறவும்.