பூவை துணியில் ட்ரேஸ் செய்த நிலையில்..
மூன்று பூக்களும் சங்கிலித்தையலில் அவுட்லைன் தைத்த நிலையில்…
இந்த டிசைனை நான் எடுத்த காரணமே லாங் & ஷார்ட் ஸ்டிச்-ல் தைக்கலாம் என்றுதான். ஒரு பூவில் முக்கால்வாசி முடிந்து, அடுத்த பூவுக்கும் தையல் ஆரம்பித்த நிலையில்..
அடுத்து சில க்ளோஸ்-அப் படங்கள்..
லாங் & ஷார்ட் ஸ்டிச்சில் முக்கியமான விஷயமே பொருத்தமான வண்ண நூல்களை அழகாகக் கலந்து தைப்பதுதான். அதில் கொஞ்சம் கோட்டைவிட்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது, இலைகளையும் பூக்களையும் பார்க்கும்போது.
ஒரு பூவின் மகரந்தங்களுக்கு ஃப்ரென்ச் நாட் தைத்தேன், மற்ற இரண்டு பூக்களும் ஸாடின் ஸ்டிச்-சிலேயே தைத்தாயிற்று..