முகத்தை கழுவுவது மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும்.
ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.
ஐஸ் கட்டி மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
பவுடர் மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.