தேவையான பொருட்கள்
வெள்ளை உளுந்து – 250 கிராம்
அரிசி – 3 மேஜைக்கரண்டி
வெண்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
இஞ்சி – 2 மேஜைக்கரண்டி
கறி வேப்பிலை – 1 கைப்பிடியளவு(நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
அரிசி மற்றும் உழுந்தை நீரில் 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்
பின்பு வடிகட்டி அரைக்கவும்
மென்மையாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
இலேசாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு அதனை மாவுடன் சேர்க்கவும்
உப்பு சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட் எடுத்து அதன் மேல் எண்ணெய் தடவவும்
மவில் கொஞ்சம் எடுத்து அதன் மீது வைத்து
அதனை தட்டையாக்கி நடுவில் படத்தில் உள்ளது போல் துளையிடவும்
இதனை கையில் வைத்தும் செய்யலாம்
இதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
பொன்னிறமாக பொரிக்கவும்
பின்பு அதனை வடிகட்டி எடுத்து பரிமாறவும்