விலையுயர்ந்த இந்த ஷுக்களின் சொந்தக்காரர்களாக பெண்மணிகளே திகழ்கின்றனர்.
உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்
நாம் சாதாரணமாய் நினைக்கும் காலணிகள் என்பது உலகளவில் மிகவும் பிரத்யேகமான வடிவமைப்பில், அதிக விலை கொண்டதாய் ரத்தின கற்கள் மற்றும் பிளாட்டின உலோகத்தினால் உருவாக்கப்படுகிறது. இத்தகைய விலை உயர்ந்த காலணிகளை உருவாக்க பிரத்யேகமான வடிவமைப்பாளர், தயாரிப்பு நிறுவனம் போன்றவை உள்ளன.
விலையுயர்ந்த இந்த ஷுக்களின் சொந்தக்காரர்களாக பெண்மணிகளே திகழ்கின்றனர். எதிலும் ஆடம்பரமாய் திகழ கூடி செல்வ சீமாட்டிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அணிய கண்கவர் காலணிகளை தயார் செய்கின்றனர். இவ்வாறு செய்யப்படும் பல காலணிகள் உலகளவில் அதிகபட்ச விலை மதிப்பு மிக்க காலணிகள் என்றவாறு உலகை வலம் வருகின்றன.
பல்வேறு பிரபலங்கள் அணிய ஏற்றவாறு பல உன்னத வேலைப்பாடு நிபுணர்களால் உருவாக்கப்பட்டு, உன்னத காலணியாய், ஆச்சர்யமூட்டும் வடிவமைப்பாய் திகழக்கூடிய இக்காலணிகளின் விலை என்பது பல மில்லியன்களை தாண்டி உள்ளன. இவ்வளவு விலை கொடுத்து இந்த காலணியை யார் வாங்குவார் என நினைத்திட வேண்டாம். இவை அனைத்தும் பல பிரபலங்கள் அணிந்து புகழ் பெற்ற காலணிகள்.
செந்நிற ரூபி காலணிகள்:
திரைப்படங்களில் பலர் கண்டு மனதை கவர்ந்த இந்த ரூபி காலணிகள் 1939-ல் ஒரு திரைப்படத்தில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு ஐம்பது ஆண்டுகள் கழித்து இந்த ரூபி காலணிகளை மறுபடியும் உருவாக்க எத்தனித்தார். சுமார் இரண்டு மாதம் கடின உழைப்பிற்கு பிறகு 4600 ரூபி கற்கள் மற்றும் 50 கேரட் வைரங்கள் பயன்படுத்தி ஆச்சர்யமூட்டும் ரூபி காலணியை உருவாக்கினர். இதன் விலை 3 மில்லியன் டாலர் ஆகும். உலகின் விலையுயர்ந்த காலணியின் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நீட்டா ஹேவெர்த் ஹீல்ஸ்: இதன் விலையும் 3 மில்லியன் டாலர்தான. சாக்லேட் பிரவுன் நிறத்தில் ஹீல்ஸ் காலணி அமைப்பில் உருவான இந்த காலணி 2006-களில் பிரபலமான ஒன்று. சாட்டின் துணியால் பீப் பாய் ஷு மாடலில் உருவான இதன் முன்புறம் சாட்டின் துணி பூ வடிவத்தின் நடுவே, வைரம், சபையர் மற்றும் ரூபி கற்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பான சிண்ட்ரெல்லா காலணிகள்:
அனைவரும் சிண்ட்ரெல்லா கதை பெண்மணி பெயரில் மிக அழகிய வடிவமைப்பில் இந்த காலணி உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் கச்சிதமான வடிவில் லேஸ் போன்ற ஸ்ட்ராப் கொண்ட இந்த ஜோடி காலணி தங்க பின்னணியில் ஜொலிக்கிறது. விரல் பகுதி மற்றும் சற்று மேல்பகுதி என கால் பகுதியின் மேற்புறம் பிளாட்டின பின்னணியில் வைர கல் பதித்த பூக்கள் கொண்டவாறு மூடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 565 வைரங்கள் பதியப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் 2 மில்லியன் டாலர்.
நீலநிற டான்சனைட் கற்கள் பதித்த ஹீல்ஸ்:
வெள்ளி நிற பின்னணியில் ஜொலிக்கும் தோல் பகுதியில் மேற்புற ஸ்ட்ராப் மற்றும் மாட்டும் பகுதி போன்றவை வைரம் மற்றும் டான்சனைட் கற்களால் உருவாக்கப்பட்டவை.
கழுத்தில் அணியும் அழகிய நீலநிற நெக்லஸ் ஒன்று. காலணியில் கால்களுக்கு அழகு சேர்க்கிறது. இதன் முன்புற மெல்லிய ஸ்ட்ராப்-பில் 28 கேரட் வைரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய நெக்லஸ் போன்ற பெரிய ஸ்ட்ராப் பகுதியில் 200 கேரட் டான்சனைட் கற்களும், 16 கேரட் பிற கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாய் 595 கேரட் வைரம் இந்த காலணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பில் மங்கையர் ஒய்யாரமாய் நடைபோட அழகிய கச்சிதமான வடிவமைப்பில், பிரம்மாண்டமான தோற்றத்தில் இந்த காலணி திகழ்கிறது. இதன் விலையும் 2 மில்லியன் டாலர்.