உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.
இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா? கவலையை விடுங்கள்.
நமக்கு கை கொடுக்க தான் இயற்கையான பொருள் இருக்கிறது அல்லவா? அது தான் தேங்காய் எண்ணெய். அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான்.
தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு.
பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம் அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே. அதே தான் உதடு வெடிப்பிற்கும்! ஏற்கனவே சோதிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.
பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.