கண்டிப்பாக இந்த பிரச்சனையை எல்லாரும் சந்தித்து இருப்போம். அதிலும் குறிப்பாக கூந்தல் நீளமான பெண்கள் மற்றும் சுருட்டை முடி இருக்கும் பெண்கள் இந்த பிரச்சனையை அடிக்கடி சந்திப்பார்கள். முடி சிக்கிக் கொண்டால் அந்த சிக்கலை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட முடியாது. சில நேரங்களில் தலையோடு சேர்த்து வலிக்க ஆரம்பித்து விடும். அதை விட முக்கியமானது கூந்தல் உடைந்து போக ஆரம்பித்து விடும்.
Detangle Your Tangled Hair With These Amazing Tips
வெளியே செல்லும் போது அழகாக இருக்க வேண்டும் என்று கூந்தலை விரித்த படி செல்லும் பெண்கள் அநேகம். ஆனால் வீட்டிற்கு வந்ததும் தான் சிக்கல் ஆரம்பமாகிறது. வெளியில் செல்லும் போது வீசும் காற்று, மாசுக்கள் மற்றும் வெயில் இவற்றால் கூந்தல் வறண்டு போய் சிக்கலாகி விடும். நாம் சீப்பை கொண்டு அப்படி இப்படி என எப்படி வாரிப் பார்த்தாலும் என்னவோ சிக்கல் மட்டும் போனபாடாக இருக்காது. இது கூந்தலை மீண்டும் மீண்டும் சேதப்படுத்த ஆரம்பித்து விடும்.
எனவே கூந்தலில் இப்படி ஏற்படும் சிக்கலை எப்படி எளிதான முறையில் தீர்க்கலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.
உங்க தலைமுடியை ஈரப்பதமாக்குங்கள்
உலர்ந்த கூந்தலில் சிக்கல் எடுத்தால் உங்க முடிகள் எளிதாக உடைந்து போகக் கூடும். எனவே உங்க முடியை ஈரப்பதத்துடன் வைப்பது சிக்கலும் விழாது அப்படி இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டால் எளிதாக எடுக்கவும் முடியும். எனவே உங்க கூந்தலை ஈரப்பதத்துடன் பட்டு போல் வைத்திருக்க கண்டிஷனர்கள் அல்லது அவ்வப்போது எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.
உங்க தலைமுடியை தவறாமல் ஒழுங்கமைக்கவும்
உங்க தலைமுடியில் முடிச்சு விழுந்து சிக்கலாகுவதற்கு பிளவுபட்ட முனைகள் ஒரு காரணமாக இருக்கலாம். இது உங்கள் தலைமுடியை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர விடாமல் தடுக்கிறது. எனவே பிளவுபட்ட முனைகளை வெட்டி உங்க கூந்தலை அழகாக ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.
தூங்குவதற்கு முன்பு உங்க தலைமுடியை பின்னுங்கள்
நிறைய பெண்கள் தூங்கும் போது கூட தலைமுடியை விரித்து போட்ட படி தூங்குகின்றனர். இதனால் காலையில் எழுந்து தலை வாரும் போது நிறைய சிக்கல்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தூங்கும் போது உங்க தலைமுடியை எப்பொழுதும் பின்னிக் கொள்ளுங்கள். இதனால் உங்க தலைமுடியும் சிக்கல் ஆகாமல் அப்படியே இருக்கும்.
சூடான முடி உபகரணங்களை தவிருங்கள்
நிறைய பேர் கூந்தலை சுருளாக்க அல்லது நேராக்க சூடான முடி உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள். இது உங்க முடியை வறண்டு போகச் செய்து சிக்கலாக்கி விடும். எனவே கூந்தலை அழகுபடுத்தும் கருவிகளை தூர வையுங்கள்.
உங்க தலைமுடியை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கவும்
ஈரப்பதம் உங்க தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். இது உங்க முடியை சிக்கலாக்கி விடும். எனவே உங்க கூந்தலை விரித்து போடாமல் எப்பொழுதும் பின்னலிட்டு கொள்வது முடி சிக்கலாகாமல் தடுக்க உதவும்.