உங்கள் முடி வலுவாக மற்றும் பளபளப்பாக இருக்கும் போது அதை நீங்கள் பிண்ணினாலோ அல்லது கழற்றி விட்டாலோ மிகவும் அழகாக இருக்கும். இதனால் தான் பெண்கள் எல்லோரும் தங்கள் முடியை பளபளப்பாக மற்றும் வலுவாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் முடிகளில் சற்று அதிகமாவே பராமரிப்பு எடுத்துக் கொள்ளுகிறார்கள். உங்கள் முடியை பளபளப்பாக வைக்கவோ அல்லது வலுவாக மாற்றவோ நீங்கள் எந்த விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டியதோ அல்லது சலூனுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
சில இயற்கையான வழிமுறைகள் மூலம் உங்கள் முடியை வலுவாக மற்றும் பளபளப்பாக மாற்ற முடியும். இந்த இயற்கையான வழிகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் மிக குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இங்கே உள்ள வழிகளில் எது உங்களுக்கு ஈசியானதோ அதை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்
முட்டை
முட்டையில் அதிக அளவு புரோட்டின் உள்ளதால் இது உங்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவும். ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கலக்கி உங்கள் முடியில் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இந்த குறிப்பை நீங்கள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். இல்லையெனில் முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டியளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து உச்சந்தையில் மற்றும் முடியின் வேர்களில் நன்றாக வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால் உங்கள் முடி வலுவானதாக மாறும்.
ஆரஞ்சு
உங்கள் முடிக்கு நல்ல பயன்களை ஆரஞ்சு கொண்டுள்ளது. உங்கள் பொடுகுத்தொல்லை மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பை ஆரஞ்சு நீக்குகிறது. ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றைக் கலந்து ஒரு முறை உங்கள் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அலசுங்கள். அல்லது ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஆலிவ் ஆயில் சரி பாதி அளவில் சேர்த்து மெதுவாக சூடுபடுத்தி உங்கள் தலையில் தேயுங்கள். அரை மணிநேரம் கழித்து கழுவுங்கள்.
ஆளிவிதைகள்
ஆளி விதைகள் ஒமேகா -3 கொண்ட கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒன்றாகும். நீங்கள் உடையக்கூடிய மற்றும் மெல்லிய முடி போன்ற முடிகளை கொண்டிருந்தால் உங்கள் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க இவை மிகவும் உதவியாக இருக்கும். அதாவது மூன்று தேக்கரண்டி ஆளி விதைகளை எடுத்து ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் இந்த தண்ணீரை நேரடியாக உச்சந்தலையில் ஒரு காட்டன் எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இது தவிர, உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நினைத்தால் உங்கள் உணவில் சிறிது ஃபிரெஷ் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் உங்கள் முடிக்கு பல அதிசயங்களை செய்யும் பண்பைக் கொண்டுள்ளது. தேக்கரண்டியளவு நெல்லிக்காய் ஜூஸ் 2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் சூடுபடுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய் கொண்டு உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து அடுத்த நாள் காலையில் தலை அலசுங்கள். நெல்லிக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் தலைமுடியைப் பிரகாசிக்க வைக்கும்.
அவகேடோ
அவகேடோ வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது. உங்கள் முடியை ஈரப்பத்துடன் வைப்பதற்கு உதவுகிறது. மேலும் அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் படுமாறு தேயுங்கள். அரைமணி நேரம் அப்படியே உலர விட்டு பின்னர் அலசுங்கள். இது உங்களுக்கு வலுவான முடி வளருவதற்கு உதவும்.