பழங்கள் இயற்கையான போஷாக்கை கொண்டுள்ளது. இதிலுள்ள அன்டி ஆக்ஸிடென்ட் உடலின் நச்சுக்களை அழிப்பதை போல் வெளிப்புறத்திலும் சருமத்தில் நச்சுக்களை அழிக்கும்.
புதிதான பழங்கள் விரைவில் உங்கள் சருமத்தில் செயல்புரியும். இளமையான சருமத்தை தரும். ஆனால் முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சருமத்திற்கு தகுந்தாற்போல் பழங்களை உபயோகிக்க வேண்டும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் எலுமிச்சை உபயோகிக்கக் கூடாது. அதேபோல் எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாழைப் பழம், ஆப்பிள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தக் கூடாது. இது எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
அவ்வாறு பழங்களும் அவற்றை முகத்தில் போடுவதால் கிடைக்கும் பலன்களையும் இங்கு காண்போம்.
ஆரஞ்சு :
உங்கள் முகம் வெயிலிலால் கருமைடைந்திருந்தால் இது சிறந்த தீர்வை தரும். ஆரஞ்சு சாறுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயில் மற்றும் மாசினால் உண்டாகும் கருமை மறைந்து முகம் பளிச்சிடும்.
வாழைப்பழம் :
வாழைப்பழம் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை செய்யலாம். வாழைப்பழத்தை மசித்து முகத்தில் போடுவதால் உங்கள் சருமம் மிருதுவாகி உப்பிய கன்னங்களை பெறலாம்.
ஸ்ட்ரா பெர்ரி :
உங்களுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால் இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும். முகம் பாலிஷாகவும் அதே சமயம் எண்ணெய் வடிவதையும் தடுக்க ஸ்ட்ரா பெர்ரியை மசித்து சிறிது பாலில் கலந்து முகத்தில் தடவவும்.
எலுமிச்சை :
எலுமிச்சையில் அதிக அமிலத்தன்மை உள்ளது. முகப்பரு என்ணெய் அதிகம் சுரப்பவர்கள் இதனை உபயோகிக்கலாம்.
எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள முகப்பருக்களின் தீவிரம் குறைந்து , பாதிப்பை விரைவில் ஆற்றும்.
தர்பூசணி :
இயற்கையான டோனராக தர்பூசணி செய்ல்படும். இது சருமத்திற்கு பொலிவை தந்து சுருக்கங்களை போக்கும்.
மாம்பழம் :
மாம்பழம் வறண்ட சருமத்திற்கு நல்லது. இது முகத்திற்கு பொலிவையும் மென்மையையும் தரும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மாம்பழத்துடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்கலாம்.