30 1432958841 07 sun3
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

பொதுவாக இரண்டு வகையான சருமம் உள்ளது. ஒன்று எண்ணெய் பசை சருமம் மற்றொன்று வறட்சியான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குள்ள பிரச்சனை, முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு முகப்பரு, பிம்பிள் பிரச்சனையுடன் இருக்கும். வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்கமான சொரசொரப்பான சருமம் என்று இருக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, ஒருசில இடங்களான மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும்.

இவற்றைத் தவிர்க்க ஒருசிலவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் வறட்சியைத் தவிர்க்கலாம். இப்போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

பெட்ரோலியம் ஜெல்லி

மூக்கைச் சுற்றி வரும் வறட்சியை நீக்க, பெட்ரோலியம் ஜெல்லியை தடவ வேண்டும். இதற்கு எந்த ஒரு நேரமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும், தடவலாம். ஆனால் தினமும் இரவில் படுக்கும் முன், தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

போதிய அளவு தண்ணீர்

சருமத்தின் வெளிப்புறத்தில் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரித்தால் மட்டும் போதாது. உட்புற பராமரிப்பும் தேவை. அதற்கு தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

பாதாம் எண்ணெய்

வறட்சி அதிகமானால் அரிப்பும், வலியும் அதிகமாகும். ஆகவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும்.

ஸ்கரப்

தூசிகளும், அழுக்குகளும் முகத்தை பொலிவிழந்து வெளிக்காட்டும். இப்படி பொலிவிழந்து காணப்படும் சருமத்தை தினமும் ஸ்கரப் செய்யாவிட்டால், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வளைவுகள் உள்ள இடங்களில் தங்கி, நிலைமையை மோசடையச் செய்யும். எனவே எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.

மாஸ்க் போடவும்

மூக்கைச் சுற்றி வரும் வறட்சியைத் தவிர்க்க, பால், தயிர் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு மாஸ்க் தயாரித்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

மற்றொரு மாஸ்க்

வேண்டுமெனில் இந்த மாஸ்க்கையும் போடலாம். அது என்னவெனில் முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் வறட்சியைத் தடுக்கலாம்.

சன் ஸ்க்ரீனில்

கவனம் தேவை வெளியே வெயிலில் செல்லும் போது, தவறாமல் சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். அதற்கு சன் ஸ்க்ரீன் வாங்கும் முன், அதில் ஆல்கஹால் உள்ளதா என கவனிக்க வேண்டும். அதில் ஆல்கஹால் இருந்தால், அவற்றை வாங்க கூடாது. ஏனெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். கற்றாழை அல்லது ஆலிவ் ஆயில் உள்ள சன் ஸ்க்ரீன் லோசனை தடவுங்கள். Show Thumbnail

30 1432958841 07 sun3

Related posts

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika

கருவளையத்தை போக்கும் ஃபேஸ் பேக்குகள்

nathan

ஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan

சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை விரைவாக குறைக்க இதோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடுங்கள்!

nathan

கண்களில் கருவளையம் மறைய…

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்தைப் பொலிவாக்க இது ஒன்று போதுமே..!

nathan

பளப் பளப்பான சருமத்தை பெற்றுதரும் மூலிகைப் பொருட்கள்!

nathan