தினந்தோறும் நம் முகத்தைச் சுத்தம் செய்யும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விசயங்களை மருத்துவர்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டுள்ளனர்.
அன்றாட வாழ்வில் நம் முகத்தை சுத்தம் செய்யும் போது கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது சருமம் மேலும் பொலிவு பெறுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் கைகளை முதலில் கவனியுங்கள்:
தினந்தோறும் முகத்தைச் சுத்தம் செய்யும் முன் அனைவரும் தங்கள் கைகளைச் சுத்தம் செய்வது கட்டாயமாகும், இல்லையெனில் கைகளில் உள்ள கிருமிகள் சருமத்தை பாதிக்க நாமே வழிவகை செய்தது போல ஆகிவிடும்.
தரமுள்ள சோப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள்:
சிலர் முகத்தைச் சுத்தம் செய்வதற்கு துணிகளை சுத்தம் செய்யக்
கூடிய டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்துகின்றனர். இது அறவே, தவிர்க்க பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், துணிகளை துவைப்பதற்கான சோப்புகளில் வேதிப்பொருட்களின் வீச்சு அதிகமாக இருக்கும், இதனை சருமத்தினை சுத்தப்படுத்த பயன்படுத்தினால், முகத்திலுள்ள சில நல்ல நுண்ணுயிரிகளும் பாதிக்க நேரிடும்.
குளிர்ச்சியான அல்லது சூடான நீரை பயன்படுத்துவதன் விளைவு:
மிகக்குளிர்ச்சியான அல்லது சூடான நீரை முகத்தைச் சுத்தம் செய்ய பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் இயற்கையாக இருக்க வேண்டிய ஈரப்பதம் பாதிக்க நேரிடும், மேலும், இதனால் இரத்த நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதோடு நரம்புகளையும் பாதிக்கச் செய்யும்.
நீண்ட நேரம் முகத்தை தேய்த்தல்:
முகத்தை நன்றாக தேய்ப்பதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு சுத்தமடையும் என்பது உண்மை. ஆனால், அதே சமயத்தில் நீண்ட நேரம் முகத்தை தேய்த்து கொண்டிருந்தால் முகத்தில் அது எரிச்சலை உண்டாக்கும்.
தேவையான அளவு மட்டுமே சுத்தம் செய்யுங்கள்:
முகத்தை தேவையில்லாமால் அடிக்கடி சுத்தம் செய்யக் கூடாது. சாதாரணமாக, ஒருநாளைக்கு முகத்தை இரண்டு முறை சுத்தம் செய்தாலே போதுமானது. தேவைக்கு அதிகமாக முகத்தை சுத்தம் செய்வது முகத்தில் எண்ணை பசையை அதிகரிக்கும்.